ஆதிலட்சுமி
ஆதிலட்சுமி
அஷ்ட்டலட்சுமி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும்.
செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, எனவே கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல். முதலிய பதினாறு செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள்.
முந்துதிரு - ஆதிலட்சுமி
மகாலட்சுமி, பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம். இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை.
செல்வத்திரு - தனலட்சுமி
பொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை.சக்கரம், சங்கு, கலசம், வில்லம்பு, தாமரை, அஞ்சேல் என்பவற்றைத் தாங்கும் ஆறுகரம் கொண்டவள்.
தானியத்திரு - தானியலட்சுமி
வேளாண்மை வளம் பெருக்கும் தேவி. பசுந்துகில் தரித்து, நெற்கதிர், கரும்பு, வாழை, தாமரைகள், கதை, அஞ்சேல், அருளல் தரித்த எண்கரம் கொண்டருளும் தாயார்.
வேழத்திரு - கயலட்சுமி
கால்நடைகள் மூலம் வளம் அருள்பவள்.[2] இவளே அரசரொக்கும் பெருஞ்செல்வங்கள் தருபவள்.பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே! இருயானைகள் நீராட்ட , அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.
அன்னைத்திரு - சந்தானலட்சுமி
குழந்தைப்பேறு அருளும் திருமகள்.கலசங்கள், கத்தி, கேடயம், அஞ்சேல் தரித்த அறுகரத்தவள். மடியில் குழந்தையொன்று அமர்ந்திருக்க அருள்புரிவாள்.
திறல்திரு - வீரலட்சுமி
வீரம், வலிமை, அருளுவாள்.] துன்பகரமான தருணங்களில் வாழ்க்கையில் துணிவைத் தரும் தாயார். செவ்வாடை தரித்தவள். சங்கு, சக்கர, வில், அம்பு, கத்தி, ஓலைச்சுவடி, அஞ்சேல், அருளல் என்பவற்றைத் தாங்கிய்ய எண்கரத்தினள்.
வெற்றித்திரு -விஜயலட்சுமி
யுத்தங்களில் மாத்திரமன்றி, எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெற அருளுவாள். சங்கு, சக்கரம், பாசம், கத்தி, கேடயம், தாமரை, அஞ்சேல், அருளல் என எட்டுக்கரங்களுடன் காட்சியளிப்பவள்.
கல்வித்திரு - வித்யாலட்சுமி
அறிவையும் கலைகளில் வல்லமயும் தருபவள். வெண்துகிலுடுத்து, அஞ்சேல், அபயம், தாமரைகள் ஏந்திய நாற்கரத்தினள்.
இவ்வாறு எட்டு லட்சுமிகள் நிறைந்த அஷ்ட்டலட்சுமியின் படங்கள் கொண்ட காலண்டர்கள் வாங்க பிரனவ் காலண்டர்ஸ் வாங்க !
Call Us : 84899 28780
Address : No.7, Manjanakara Street, Madurai - 625001
Buy 2018 Calendar now @ http://bit.ly/2z5ha5Z
Buy Unique Diaries Online
Comments
Post a Comment