ஆதிலட்சுமி அஷ்ட்டலட்சுமி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும். செல்வம் என்பது பணத்தினை மட்டும் குறிப்பதன்று, எனவே கல்வி, நீண்ட ஆயுள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள், வாழ்க்கைக்கு தேவையான செல்வம், உழைப்புக்கு தேவையான ஊதியம், நோயற்ற வாழ்க்கை, எதற்கும் கலங்காத மனவலிமை, அன்புள்ள கணவன் மனைவி, அறிவு ஒழுக்கம் ஆற்றல் கொண்ட குழந்தைகள், மேன்மேலும் வளரக்கூடிய புகழ், மாறாத வார்த்தை, தடங்கலில்லாத வாழ்க்கை, வருவாயைச்சிக்கனமாக செலவழித்து சேமிப்பு அதிகரித்தல், திறமையான குடும்ப நிர்வாகம், நமக்கு உதவக்கூடிய பெருமக்களின் தொடர்பு, பிற உயிர்களிடம் அன்பு செலுத்துதல். முதலிய பதினாறு செல்வங்களுக்கும் அதிபதியாக லட்சுமி திகழ்கிறாள். முந்துதிரு - ஆதிலட்சுமி மகாலட்சுமி, பிருகு முனிவரின் மகளாக அவதரித்தவள். திருமகளின் மிகப்பழைமையான தோற்றம். இந்த லட்சுமியை ரமா லட்சுமி என்றும் அழைக்கின்றார்கள். தாமரை, வெண்கொடி, அஞ்சல், அருளல் தாங்கும் நாற்கரங்கள் கொண்ட அன்னை. செல்வத்திரு - தனலட்சுமி பொன், பணம் என்பவற்றை அருளும் அன்னை.சக்கரம், சங்கு, கலசம், வில்லம்பு, தாமர...